Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: Fish and Chip பிரியர்களுக்கு எழுந்த சிக்கல்…. வெளியான தகவல்…..!!!!!

பிரித்தானியா நாட்டின் fish and chip கடைகள் வரலாற்றில் மிகப் பெரிய சிக்கலை எதிர்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய அளவில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை காரணமாக 3ல் ஒன்று fish and chip கடைகள் இந்த வருட இறுதிக்குள் மூடப்படலாம் என்று முன்னணி தொழில் துறை அமைப்பு எச்சரித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக பிரித்தானியாவில் 10,500 fish and chip கடைகள் இயங்கி வருகிறது. ஆனால் அதில் சுமார் 3,500 கடைகள் எண்ணெய்விலை அதிகரிப்பதால் வணிகத்தை விட்டு வெளியேற நேரிடலாம் என்று கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போருக்கு பின் சூரியகாந்தி எண்ணெய் டிரம் ஒன்றின் விலையானது சுமார் ரூ30ல் இருந்து ரூ44 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மாற்றாக பயன்படுத்தப்பட்டு வந்த பாமாயில் மற்றும் ராப்சீட் எண்ணெய் விலைகளும் அதிகரித்துள்ளது. பிரித்தானியா நாட்டில் சூரியகாந்தி எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது ஒருபுறம் இருக்க, பாமாயில் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. மேலும்  போர் தொடங்கிய பிறகு விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிட்ட fish and chip கடைகள். கொரோனா தொற்றால் கடும் பாதிப்பை ஏதிர்கொண்டு மீண்டுவர முயன்று வரும் சூழ்நிலையில், இப்போது ரஷ்ய போர் காரணமாக அதைவிட பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2019-ல் உலகளாவிய சூரியகாந்தி விதை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் 48 சதவீத அளவுக்கு உக்ரைன் மேற்கொள்கிறது. இதே வருடத்தில் 24 சதவீத அளவுக்கு ரஷ்யாவும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. சென்ற வாரம் பிரித்தானியாவிலுள்ள பல்பொருள் அங்காடிகள் தட்டுப்பாடு காரணமாக தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தலா 2 போத்தல்கள் வழங்கத் தொடங்கியது. இதற்கிடையே அதிகரித்து வரும் உள்நாட்டு விலையை சமாளிக்க பாமாயிலின் மீதான திடீர் ஏற்றுமதி தடையை கடந்த திங்களன்று இந்தோனேசியா அறிவித்த பின், இவ்விவகாரத்தில் மேலும் சிக்கல்கள் எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |