உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு ராணுவபடைப் பிரிவு இயங்கி வருவதாக ரஷ்ய ஊடகம் வெளியிட்ட அறிக்கை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொள்ள இருப்பதாக ரஷ்ய சிறப்பு விசாரணை அமைப்பு அறிவித்துள்ளது. உக்ரைனின் மேற்குப்பகுதி நகரான லிவிவ்-வில் பிரித்தானியாவின் சிறப்பு விமான சேவையின் உயரடுக்கு ராணுவபடை ரஷ்யாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக செய்தி ஊடகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் பிரித்தானியாவின் சிறப்பு விமான சேவையின் உயரடுக்கு ராணுவபடை உக்ரைனிலிருந்து ராணுவபடைக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதாகவும், அந்நாட்டின் மேற்கு பகுதியில் நேரடியான ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் ரஷ்ய செய்தி ஊடகம் வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாக கொண்டு உக்ரைனில் விசாராணை மேற்கொள்ள உள்ளதாக சிறப்பு விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தங்களது சிறப்பு ராணுவ நடவடிக்கைகளுக்கு நோட்டோ நாடுகள் தலையிடகூடாது என ரஷ்யா எச்சரித்துவரும் சூழ்நிலையில், பிரித்தானிய உயரடுக்கு ராணுவபடை தொடர்பான விசாரணையை ரஷ்யா நடத்தப் போகிறது, ஆனால் எவ்வாறு இவ்விசாரணை நடத்தப்படும் என்பது போன்ற தகவல்களை ரஷ்யா வெளியிடவில்லை. இது பற்றி பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், உயரடுக்கு ராணுவபடை தொடர்பாக எந்த தகவலும் வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது. இந்த வருட தொடக்கதில் உக்ரைனின் ராணுவ வீரர்களுக்கு தொட்டி எதிர்ப்பு ஆயுதங்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்ற பயிற்சிகளை பிரித்தானிய ராணுவம் வழங்கியதாகவும், ஆனால் ரஷ்ய போர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு பிரித்தானிய சிறப்புப்படை வெளியேறி விட்டதாக தெரிவித்துள்ளது.