பிரித்தானியாவிற்கு பொருட்கள் கொண்டு வரும் லாரிகளையும் படகுகளையும் பிரான்ஸ் நாட்டு மீனவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று பிரான்சில் உள்ள கலைஸ் துறைமுகத்தில் 6 பிரான்ஸ் படகுகள் சேர்ந்து பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவிற்கு புறப்படும் சில படகுகளை செல்லவிடாமல் வழிமறித்துத் உள்ளது. மேலும் பிரித்தானியாவை சேர்ந்த நார்மாண்டி trader’s எனும் சரக்கு கப்பலை பிரான்சை சேர்ந்த மீன்பிடி படகுகள் நகர விடாமல் சுற்றி வளைத்து உள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து தகவலறிந்த பிரான்ஸ் போலீசார் மற்றும் இராணுவத்தினர் உடனடியாக பிரான்ஸைச் சேர்ந்த படகுகளை அப்புறப்படுத்தி அனுப்பிவைத்தனர். மேலும் பிரான்ஷையும் பிரித்தானியாவையும் இணைக்கும் சேனல் சுரங்க பாதையில் பிரான்ஸ் நாட்டு மீனவர்கள் திடீரென ஒன்றுகூடி கார்களையும் வேன்களையும் வழிமறித்து உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் நாட்டு மீனவர் தலைவர் கூறியதாவது, இது வெறும் எச்சரிக்கை தான் எனவும் மேலும் பிரித்தானியர்கள் ஐரோப்பிய நாட்டு சந்தைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் பிரான்ஸ் நாட்டு மீனவர்கள் பிரித்தானிய கடல் பகுதியில் மீன்பிடிக்க கூடாதாம் இது என்ன நியாயம் என கூறியுள்ளார். மேலும் பிரித்தானிய அரசு ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.