Categories
உலக செய்திகள்

பிரிட்டனிற்குள் நுழைந்தது வேறுவகை கொரோனா.. சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்..!!

இந்தியாவில் கண்டறியப்பட்ட 2 கொரோனா வைரஸ்கள் தற்போது பிரிட்டனில் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

உலகில் ஒரு நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பிற நாடுகளில் வெவ்வேறு விதமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டு வேறு வேறு இடங்களில் பரவிய கொரோனா பிரிட்டனில் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரிட்டனில் தற்போது வரை சுமார் 77 வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதில் இங்கிலாந்தில் 73 வழக்குகளும், ஸ்காட்லாந்தில் நான்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரனோ வைரஸ் E484Q மற்றும் L452R போன்றவை ஆகும். ஆனால் பிரிட்டனிற்கு இந்த கொரோனா வைரஸ் எவ்வாறு புகுந்துள்ளது என்று தெரியவில்லை.

தற்போது இங்கிலாந்தை சேர்ந்த 6 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆய்வாளர்கள், கண்டறியப்பட்ட இந்த கொரனோ வைரஸ் முன்னரே தடுப்பூசியால் கிடைக்கப்பெற்ற ஆன்டிபாடிகளை எதிர்க்கும் சக்தி உடையது என்று கூறுகிறார்கள். மேலும் தற்போது வரை இந்தியா, பிரிட்டனின் சிவப்பு நாடுகள் பட்டியலில் இடம் பெறவில்லை.

அவ்வாறு இருந்தால் பிரிட்டனிற்கு செல்லும் இந்திய குடிமக்கள் சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |