பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “கடுவா” திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும்.
மலையாள சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் பிரித்விராஜ். இவர் தற்போது இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் கடுவா படத்தில் நடித்துள்ளார். கடுவா என்ற வார்த்தைக்கு புலி என தமிழில் அர்த்தம். இத்திரைப்படத்தில் திலீஷ் போத்தன் சித்திக், சம்யுக்தா மேனன், அஜு வர்கீஸ், சாய்குமார்,சீமா என பலரும் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் ஜூன் 30-ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இத்திரைப்படமானது ஜூலை 7ஆம் தேதி ரிலீஸாகும் என நடிகர் பிரித்விராஜ் அறிவித்திருந்தார். இந்த நிலையில் திட்டமிட்டபடியே நாளை திரைப்படம் வெளியாக உள்ளது.