Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரித்விராஜின் ‘பிரம்மம்’… விறுவிறுப்பான டிரைலர் இதோ…!!!

பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் கோல்ட் கேஸ், குருதி போன்ற திரில்லர் திரைப்படங்களில் நடித்து அசத்தி இருந்தார். அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் பிரம்மம் திரைப்படம் உருவாகியுள்ளது . ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா, அனன்யா நாயர், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏபி இன்டர்நேஷனல் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் மலையாள ரீமேக்காகும். இந்நிலையில் பிரம்மம் படத்தின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |