பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ப்ரோ டாடி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது .
மலையாள திரையுலகில் பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து மீண்டும் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ப்ரோ டாடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் மீனா, பிரித்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், முரளி கோபி, கனிகா, லாலு அலெக்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . கேரளாவில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் ப்ரோ டாடி படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.