Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற கள்ளக்காதலி…. அடித்து கொன்ற முதியவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்காதலி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டியில் கொங்கன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் விவசாயம் தொடர்பாக கொங்கன் முள்ளுக்குறிச்சிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மலையாளம் பட்டியை சேர்ந்த தங்கமணி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அடுத்து திருமணமாகாத தங்கமணியும், கொங்கனும் அரசம்பட்டியில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கமணி கொங்கனை விட்டு பிரிந்து சென்றதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கொங்கன் கட்டையால் தங்கமணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொங்கனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |