Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற காதல் கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. பரிதவிக்கும் மகள்கள்…!!

குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் பாண்டிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அலமேலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக அலமேலு தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த அலமேலு தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலமேலுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அலமேலு பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |