கள்ளகாதலால் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து கணவன் கொலை செய்துள்ள சம்பவமானது பரமக்குடியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது .
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த மாரியப்பனின் மகன் 31 வயதான வெற்றிச்செல்வன். இவர் அப்பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பாக வெற்றி செல்வனுக்கும், மதுரை மாவட்டம் யாகப்பா நகரிலுள்ள குணசேகரனின் மகள் 27 வயதான சரண்யா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. கணவர் வெற்றிச்செல்வன் உடன் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனையால் மனைவி சரண்யாவை பிரிந்து குழந்தைகளோடு அவர் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் குடும்ப வறுமை நிலை காரணமாக சரண்யா அங்குள்ள மாட்டுதாவணி பகுதியில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்நேரத்தில் வெற்றிச்செல்வன் நேற்று மதுபோதையில் மனைவி சரண்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உன்னை பார்க்கவேண்டும் என்றும் உடனே பரமக்குடிக்கு வரவேண்டுமென்று கூறியுள்ளார். இதைக்கேட்டு சரண்யா பரமக்குடிக்கு சென்றுள்ளார். ஆனால் வீட்டில் இருவரும் தனிமையாக இருந்ததால் இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மதுபோதையில் இருந்த வெற்றிசெல்வன், சரண்யாவிடம் உனக்கு மதுரையில் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறினார். இதற்கு சரண்யா மறுப்பு தெரிவிக்க வாக்குவாதம் பெரிதானது. இதனால் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன் ,வீட்டின் வெளியே இருந்த பெரிய பாரங்கள் ஒன்றை எடுத்து கொண்டு சரண்யாவின் தலையில் போட்டுள்ளார். படுகாயமடைந்த சரண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.
உடனே வெற்றி செல்வன் பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். பரமக்குடி இன்ஸ்பெக்டரான தமிழ்ச்செல்வி மற்றும் அவருடன் பணி புரியும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சரண்யாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். கள்ளக்காதல் விவகாரத்தால் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.