Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி…. ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள காவாங்கரை மாநகரில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக வினோத்தின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து குடும்பம் நடத்த வருமாறு வினோத் தனது மனைவியை அடிக்கடி அழைத்துள்ளார்.

ஆனாலும் அந்த பெண் குடும்பம் நடத்த மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் தனது வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |