பிரபல இந்தி நடிகர் இம்ரான்கான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர் இம்ரான் கான் ‘ஜனே து யா ஜனே நா’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் ஐ ஹேட் லவ் ஸ்டோரி, ஹிட்நேப், ஹோரி தேரே பியார் மெய்ன், டெல்லி பெல்லி, கட்டி பட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
முதல் படத்திற்குப் பிறகு இம்ரான் கான் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தோல்வியை சந்தித்தன. இந்நிலையில் அவரது மனைவி அவந்திகா மாலிக் , மகள் இமாராவுடன் இம்ரான் கானை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் விரக்தியடைந்த இம்ரான்கான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.