மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் காணியாளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலை என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுடலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுடலை தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுடலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுடலை பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்