மருமகள் பிரிந்து சென்றதால் மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் மாரியம்மாள்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மருமகள் உள்ளார். இந்நிலையில் மாரியம்மாளும், ரேவதியும் இணைந்து குழு மூலம் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் ரேவதி தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மருமகள் பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்த மாரியம்மாள் திடீரென தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மாரியம்மாளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.