Categories
தேசிய செய்திகள்

பிரிந்த குடும்பம்…. டிக்டாக் வீடியோவால் இணைந்தது…..!!

டிக்டாக் செயலியில் பல குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் அதே செயலி ஒரு குடும்பத்தை சேர்த்துவைத்த நிகழ்வும் இங்கு அரங்கேறியிருக்கிறது .

கர்ணுல் மாவட்டம் நந்தியாழாவை சேர்ந்த புள்ளையா என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில் அவரது மகன் நரசிம்மலு வெளியிட்ட டிக்டாக் வீடியோ தந்தையுடன் சேர்த்து வைத்துள்ளது. குஜராத்தில் வாழ்ந்து வந்த புள்ளைய தன் புகைப்படத்தை வைத்து மகன் வெளியிட்ட டிக்டாக் வீடியோவை பார்த்து மனம் நெகிழ்ந்து உருகினார்.

தனது மகனை பார்த்து உள்ளம் நெகிழ்ந்த புள்ளையா தானும் ஒரு டிக்டாக் வீடியோ செய்து மகனுக்கு அனுப்பினார். அதுவரைக்கும் தனது தந்தை இறந்துவிட்டார் என எண்ணி அவர் உருவப்படத்திற்கு மாலை அனுவித்து வணங்கி வந்த நிலையில் உடனடியாக குஜராத் சென்ற மகன் நரசிம்மலு தனது தந்தையை கண்ணீர் மல்க அழைத்து வந்தார். , இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டனர். தங்களை மீண்டும் ஒன்று சேர்த்த டிக்டாக் செயலிக்கு அந்த குடும்பம் நன்றியை தெரிவித்தனர் .

Categories

Tech |