சமந்தாவும் நாக சைதன்யாவும் கூடிய விரைவில் புதிய படமொன்றில் இணைய இருக்கின்றார்களாம்.
தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் வெளியீட்டிற்காக காத்துள்ளது. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தார்.
விவாகரத்துக்குப் பின் சமந்தா ஆக்டிவாக செயல்பட்டு வருகின்ற நிலையில் கவர்ச்சியாகவும் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் இணைய உள்ளார்களாம். இவர்களை சேர்ப்பதற்காக இயக்குனர் இந்த முயற்சியை செய்து வருகின்ற நிலையில் 2019 ஆம் வருடம் ஓ பேபி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே சமந்தா மற்றும் நாக சைதன்யாவிடம் கதையைக் கூறி இருக்கின்றார். நந்தினி ரெட்டிக்கு சமந்தா நெருங்கிய தோழியாக இருப்பதால் இவரின் இயக்கத்தில் நடிக்க ஒத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.