இயக்குனர் மிஸ்கின் பிரிந்த மனைவி மற்றும் மகள் பற்றி பேட்டியில் உருக்கத்துடன் பேசியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் மிஷ்கின். தனது வித்தியாசமான கதையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விடுவார். இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிசாசு 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றார்கள். தற்பொழுது படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. பிசாசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
மேலும் பூர்ணா, ராஜ்குமார், பிச்சுமணி ஆகியோர் படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் ராஜா இசையமைக்கின்றார். இந்நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மிஸ்கின் கூறியுள்ளதாவது, பலர் தன்னிடம் விரும்பி நடிக்க வேண்டும் என்று கேட்டதாகவும் நடிப்பதற்கு அதிக பணம் தருவதாகவும் கூறியதால் என்னால் நடிக்க மறுக்க முடியவில்லை. ஆனால் அதே நேரத்தில் ஒரு படத்தை இயக்கும் பொழுது நான் நடிக்க மாட்டேன். இயக்கி முடித்து அடுத்த படத்தை ஆரம்பிக்கும் வரை மட்டுமே நடிப்பேன். நடிப்பதால் கிடைக்கும் பணத்தை நான் தனியாக சேமித்து வைத்துள்ளேன்.
அது எனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருக்கிறேன். நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்குப் பிறகு எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மகள் பிறந்த சில நாட்களிலேயே மனைவியை நான் பிரிந்து விட்டேன். பிரிவிற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம். என்னுடைய மனைவி மகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார். அது மட்டுமல்ல என்னையும் அவள் இன்னமும் நேசித்துக் கொண்டிருக்கின்றார் கேள்வி பட்டதாக உருக்கத்துடன் பேசி இருக்கின்றார். இவரின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.