உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான கிம் கர்தாஷியன் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மாடல் அழகியாகவும் இருக்கின்றார். கிம் கர்தாஷியன் கடந்த 2014ல் பிரபல டாப் பாடகர் கென்யே வெஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் கிம் தனது கணவர் கென்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்து இருக்கின்றார். இதனை அடுத்து கிம் காமெடி நடிகர் பீட் டேவிட்சனை கடந்த 9 மாதங்களாக காதலித்து வந்தார். இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. இந்த சூழலில் இந்த பிரபல காதல் ஜோடி தங்கள் காதலை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாய் பரவி வருகின்றது.