இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர்.
தமிழ் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கின்றார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்திற்காக முதல் முறையாக தெலுங்கில் டப்பிங் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் தெலுங்கில் சரளமாகவும், தெளிவாகவும் பேசுவதற்கான நுட்பங்களை கற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.