சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் தோல்விக்குரிய காரணம் குறித்து தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்ஷன் தயாரிப்பில் தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றி திரைப்படத்தைக் கொடுத்த டிரைக்டர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த படம் பிரின்ஸ். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதுடன் தோல்வி திரைப்படமாகவும் அமைந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது “ஒரு படத்தினுடைய வெற்றிக்கு நல்ல கதை முக்கியம். படம் வெற்றி அடைந்தாலும் தோல்வியடைந்தாலும் அதற்கு இயக்குநர்கள் தான் காரணம். பிரின்ஸ் படம் தோல்வி அடைந்ததற்கு அந்த படத்தின் இயக்குநரே காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.