தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படம் நடிகை பிரியங்கா மோகன் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த அறிமுகம் ஆனார். அதன் பிறகு எதற்கும் துணிந்தவன், டான் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இவர் அடுத்ததாக ஜெயம் ரவியுடன் இணைந்து ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் பிரியங்காமோகன் முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்க போவதாக தகவல் வெளியானது. ஆனால் அது உண்மை இல்லை, நான் ஜெயிலர் படத்தில் நடிக்கவில்லை என்று அவரை கூறிவிட்டார். இதற்கு பல கிசுகிசுகளும் எழுந்தது. இந்நிலையில் பிரியங்கா மோகன் நிராகரித்த கதாபாத்திரத்தில் தற்போது தமன்னா நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.