காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சாயல்குடி வேலுச்சாமி, பொருளாளர் ராஜாராம்,பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன், நகர் தலைவர்கள் அஜ்மல்கான், கோபி உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.