Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிரியாணிலாம் கொடுக்க வேண்டாம்” அவங்க செலவுல சாப்பிடட்டும்…. முதல்வர் போட்ட உத்தரவு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து வருகிற 23ம் தேதி மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. வழக்கமாக மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அந்தந்த துறைகளில் இருந்து எம்எல்ஏக்களுக்கு பரிசுப்பொருட்கள், பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை வழங்குவது போன்ற நடைமுறைகள் உள்ளன. இதற்காக அந்தந்த அரசு துறைகளில் இருந்து சுமார் 3 லட்சம் வரை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் இவ்வாறு செலவு செய்வதற்கு பட்ஜெட்டில் எந்தவித அனுமதியும் கிடையாது. இந்நிலையில் எம்எல்ஏக்களுக்கு பிரியாணி, பரிசு பொருட்களை வழங்கும் இந்த நடைமுறையை கைவிடுமாறு முதல்வர் ஸ்டாலின் அந்தந்த துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேண்டுமென்றால் அவர்களுடைய சொந்த செலவில் பிரியாணி உணவு வகைகளை எம்எல்ஏக்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் அல்லது சட்டமன்றத்தில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Categories

Tech |