பிரியாணி சாப்பிட்ட வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள லக்கம்பட்டி காலனியில் தீர்த்தகிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருக்கும் பர்னிச்சர் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அருண்குமாரை நண்பர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.