Categories
மாநில செய்திகள்

பிரியாணி பிரியர்களுக்கு….. ‘பிரியாணி தினம்’ கொண்டாட அழைப்பு….. பிரபல நிறுவனம் அழைப்பு….!!!

இந்தியாவின் பிரபல பாஸ்மதி அரிசி பிராண்ட் தாவத் ஜூலை 3 அன்று உலக பிரியாணி தினம் கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. தாவத் அரிசி பிராண்ட் சார்பில் வெளியிடப்பட்ட யூடியூப் ப்ரோமோஷன் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளன. இந்த பிராண்டை தயாரித்து வரும் எல்டி புட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரியாணி மீதான பிரியம் என்பது சர்வதேச அளவிலான உணர்ச்சியாக உள்ளது. நாடுகள் கடந்து கலாச்சாரங்கள் கடந்து அனைத்து வயதினருக்குமானதாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஒரு உணவு பொருள் தேசம் முழுவதும் விரும்பி உண்ணப்படும் என்றால் அது பிரியாணியாக தான் இருக்க முடியும். சமீபத்திய தகவலின் படி ஸ்விகி, zomato போன்ற செயல்களில் அதிகம் ஆர்டர் செய்யப்படுவது பிரியாணி தான். தொற்றுப் பெருங் காலத்தில் கூட மக்கள் பிரியாணியை ஆர்டர் செய்து உண்டு மகிழ்ந்திருந்ததாக தகவல் வெளியானது. பிரியாணி பிரியர்கள் பலரும் எந்த ஊரில் பிரியாணி நன்றாக உள்ளது என்று தேடி சென்று உண்ணும் அளவுக்கு பிரியாணி மீது பிரியம் அதிகரித்துள்ளது.

 

Categories

Tech |