Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியா பவானி சங்கரின் ‘ஹாஸ்டல்’… பட்டாஸாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நடிகை பிரியா பவானி சங்கர் மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், மாபியா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹாஸ்டல். மேலும் இந்த படத்தில் முனீஸ்காந்த், நாசர், ரவிமரியா, சதீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது . இந்நிலையில் இந்த படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரியா பவானி சங்கர், அசோக்செல்வன், சதீஷ் உள்ளிட்டோர் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படம் வெளியாகவுள்ளது .

Categories

Tech |