Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியா பவானி சங்கர் போட்ட ட்வீட்… மணமகன் தேடுகிறாரா?… ரசிகர்கள் பரபரப்பு…!!!

நடிகை பிரியா பவானி சங்கர்  ட்விட்டர் பக்கத்தில் தனது மேட்ரிமோனி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி சின்னத்திரை தொடர்களில் அறிமுகமாகிய நடிகை பிரியா பவானி சங்கர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியானார். இதையடுத்து இவர் மாபியா ,கடைக்குட்டி சிங்கம் ,மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் ‌. தற்போது இவர் நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்  பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால் அவர்கள் இருவருக்கும் காதல் என வதந்தி கிளம்பியது.

அதன் பின்னர் அந்தப் புகைப்படம் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோஷன் புகைப்படம் என தெரியவந்தது. இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய அழகான  புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு ‘வருங்கால மணமகன்கள் வரவேற்கப்படுகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார் . இந்த பதிவால் பிரியா பவானி சங்கர் மணமகன் தேடுகிறாரா? அல்லது இது புதிய படத்தின் புரோமோஷன் புகைப்படமா ?என ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

Categories

Tech |