கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள அழகிய மண்டபத்தில் சேரிட்டி ட்ரஸ்ட் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் மருத்துவ உதவித்தொகையும், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.அதன் பிறகு சிறப்புரை ஆற்றினார். இதை அடுத்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையையும், மருத்துவ உதவித் தொகையையும் வழங்கியுள்ளார். பிருந்தாவன் தொண்டு நிறுவனம் அறக்கட்டளையின் இயக்குனரான ,கோட்சே தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட கல்வி அலுவலர் மோகன் காங்கிரஸ், கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் ஹனுகுமார், தக்கலை வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜான் கிறிஸ்டோபர் மற்றும் விருந்தாவன் அறக்கட்டளை தலைவர் உள்பட ஏராளமானவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.