பிரபல பதிப்பாளர் மற்றும் பத்திரிகையாளருக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு அரசு கடந்த 1957-ம் ஆண்டு உலகில் உள்ள பல சிறந்த மனிதர்களை ஊக்குவிக்கும் விதமாக செவாலியே விருது வழங்கி வருகிறது. இதில் செவ்வாலியே என்பதற்கு உயர்ந்த மனிதர் என்பது பொருள். இந்த விருது தமிழகத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் மற்றும் மொழிபெயர்ப்பாளரான வெ. ஸ்ரீராம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது தற்போது காலச்சுவடு கண்ணனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு நவீன தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் காலச்சுவடு பதிப்பகத்தை நடத்தி வருகிறார். இந்த பதிப்பகம் மூலமாக சிறந்த தமிழ் நூல்களை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளுக்கு மொழி பெயர்த்து உலகம் முழுவதும் அனுப்பி தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றி வருகிறார்.
இதேபோன்று பிற நாட்டில் உள்ள சிறந்த நூல்களையும் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தும் சிறந்த வேலையை செய்து வருகிறார். இதன் காரணமாகத்தான் கண்ணனுக்கு செவ்வாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்டதற்காக எழுத்தாளர் மற்றும் பேராசிரியர் ராஜன் அவரை பாராட்டியுள்ளார். இந்த விருது மூலமாக பிரெஞ்சுக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் உறவும் மேம்படும் என்றும், பதிப்பகத்துறையில் சிறந்து விளங்கும் கண்ணனின் பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.