Categories
தேசிய செய்திகள்

பிரேக் கட்டுப்பாட்டை இழந்ததால் பல மீட்டர் தூரம் பின்னோக்கி சென்ற ரயில் ..!அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் .!!

டெல்லியிலிருந்து சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பல மீட்டர் தூரம் பின்னோக்கி சென்று  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனக்பூர் சென்று கொண்டிருந்த பூர்ணகிரி ஜன்ஷடப்டி ரயில் பிரேக் பிடிக்காத காரணத்தால்  திடீரென்று பல மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடியுள்ளது. ரயிலில் மொத்தம் 64 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் தனக்பூர் தடத்தில் மாடு ஒன்று அடிபட்டு இறந்தது கிடந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது.ஆனால் திடீரென்று ரயில் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது .

மேலும் ரயிலை நிறுத்த  ஓட்டுனர் மேற்கொண்ட முயற்சியும்  பயனளிக்கவில்ல. பிரஷர் பைப்பிள் கசிவு ஏற்பட்டதால் பிரேக்குகள் செயலிழந்ததாக  கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தால் பயணிகள் யாருக்கும் எந்தவித ஆபத்து ஏற்படவில்லை என்றும், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும்  ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |