Categories
உலக செய்திகள்

பிரேசிலின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட லூலா… எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுனர்கள் சாலை மறியல்… பெரும் பரபரப்பு….!!!!!!

பிரேசிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் பெல்சனோரா மீண்டும் போட்டி உள்ளார். அவருக்கு எதிராக லூலா டி சில்வா களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் தேர்தலில் லூலா 50. 9 சதவிகித வாக்குகளும் பொல்சோனாரா49.1 சதவிகித வாக்குகளும் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை பெற்று இடதுசாரி தலைவர் லூலா வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக நான்கு வருடங்களாக ஆட்சியில் இருந்த வலதுசாரி தலைவரான ஜெயிர் தோற்கடித்து லூலா வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரேசிலின் அதிபராகியுள்ளார்.

இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற்று பிரேசிலின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கின்ற லூலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுனர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லூலா அதிபராக வருவதை தடுப்பதற்கு ராணுவப் புரட்சி அழைப்பு விடுத்து சாலை மறியல் நடத்தியுள்ளனர்.  மேலும் பிரேசிலில் கோயாஸ் உள்ளிட்ட 12 மாகாணங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தற்போது பதவி விலக உள்ள அதிபர் ஜெயிர்க்கு ஆதரவாக லாரி ஓட்டுநர்கள் போராட்டம் அமைந்துள்ளது.

Categories

Tech |