பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் தலைநகர் விடோரியாவில் இருந்து 50 மைல்கள் வடக்கே அமைந்துள்ள சிறிய நகரம் அராகுரூஸ். இந்த நகரில் ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் பிரைமோ பிட்டி பள்ளி மற்றும் பிரையா டி காக்கிரல் கல்வி மையம் போன்ற இரண்டு பள்ளிகளுக்குள் புகுந்து திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை மாகாண கவர்னர் ரனேட்டோ காசா கிராண்ட் உறுதி செய்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் எனவும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு விரைவில் தகவல் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.