பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 இலட்சத்தை எட்டியுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரேசில் நாட்டில் கொரோனாவால் 48 ஆயிரத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 இலட்சத்தை எட்டியுள்ளது.
மேலும் ஒரே நாளில் 1365 பேர் உயிர் இழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 1,10,000 தாண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். மேலும் 7,47,000 அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது.