பிரேசிலில் அமைக்கப்பட்டுள்ள 230 அடி கிறிஸ்துமஸ் மரம் அந்தரத்தில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்டு, வான வேடிக்கைகளுடன் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது.
பிரேசில் நாட்டில் அமைந்துள்ள ரியொடி ஜெனிரோ பகுதியில் உள்ள ரோட்ரிகொ டி ப்ரெய்டாஸ் லகூன் என்ற சுற்றுலா பகுதியில் உலோகங்களை பயன்படுத்தி 230 உயரத்தில் மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மரம் நீருக்கயடியிலிருந்து 11 தளங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 230 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தில் 9 லட்ச எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்பட்டு 8 வெவ்வேறு விதமான வண்ணங்களில் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மரம் அந்த பகுதியில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது