Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பிரேத பரிசோதனை அறையிலிருந்து வந்த துர்நாற்றம்…. வாந்தி எடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

பிரேத பரிசோதனை அறையில் துர்நாற்றம் வீசியதால் உடலை வாங்க சென்ற பொதுமக்கள் வாந்தி எடுத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தாளிக்கால் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான சாமுவேல்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சாமுவேல் பெரப்பங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சாமுவேலின் உடலை வாங்குவதற்காக அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

அப்போது பிரேத பரிசோதனை அறையில் துர்நாற்றம் வீசியதால் அனைவரும் குமட்டலால் வாந்தி எடுத்துள்ளனர். அங்குள்ள ப்ரீசர்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. இதனால் கோபமடைந்த சாமுவேலின் உறவினர்கள் பணியில் இருந்த மருத்துவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பிரீசரை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். பின்னர் உறவினர்கள் சாமுவேலின் உடலை பெற்று கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |