அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகும் கோல்ட் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், அட்லீ- ஷாருக்கான் இணையும் பாலிவுட் படம் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் பிரேமம் படத்தை இயக்கி பிரபலமடைந்த அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
#LadySuperStar #Nayanthara Joined Alphonse Putharen Film #Gold ♥️
Exclusive Picture With ThesniKhan Ma'am 😍 #Nayanthara #Prithviraj #Ajmal #Thesnikhan #AlphonsePutharen pic.twitter.com/IfSW2ddsH5
— Nayanthara (@nayantharra) September 13, 2021
கோல்ட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இன்று கோல்ட் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .