நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கு பிரேமம் திரைப்படத்தில் நடித்தது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். மலையாளத்தில் நிவின் பாலி சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த பிரேமம் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். தெலுங்கு ரீமேக்கில் பிரேமம் படத்தில் நாக சைதன்யாவும் ஸ்ருதிஹாசனும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் இணையத்தில் மரணகலாய் கலாய்த்தார்கள்.
இந்நிகழ்வை மறக்காமல் நினைவில் வைத்து ஸ்ருதிகாசன் அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கூறியுள்ளதாவது, “இத்திரைப்படத்தில் நடித்தற்கு மட்டும் தான் இணையத்தில் நான் கலாய்க்க பட்டேன். இத்திரைப்படத்தில் நடிக்கக்கூடாது என எண்ணினேன், இருப்பினும் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்ததால் நடித்தேன் என கூறியுள்ளார்.