Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பிரேமம்’ பட இயக்குனருடன் இணையும் நயன்தாரா… ஹீரோ இவர் தானா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக இயக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதை தொடர்ந்து இவர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

Premam director alphonse puthiran next movie with prithviraj and nayanthara  | Galatta

இந்நிலையில் மலையாளத்தில் பிரேமம் படத்தை இயக்கி பிரபலமடைந்த அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால் நயன்தாரா, பிருதிவிராஜ் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |