பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உள்ளார். அப்போது அவர் சொத்து வரி உயர்வு, நீட்தேர்வு விவகாரங்களில் திமுக அரசின் சார்பாக விமர்சித்திருக்கிறார். திடீரென ‘இரண்டு ஆடு, இரண்டு மாடு, இரண்டு பெட்டி வைத்திருப்பதாக கூறி வருபவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எதற்கு? தைரியம் இருந்தால் பாதுகாப்பு வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவாரா? என தமிழக பாஜக அண்ணாமலையை பிரேமலதா தேவையின்றி விமர்சித்துப் பேசியுள்ளார்.
அவரது இந்த பேச்சு தமிழக அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 2024 மக்களவை தேர்தலில் தான் எப்படியாவது எம்பி ஆகிவிட வேண்டும் என்றும் பிரேமலதா நினைக்கின்றார். அதற்காக திமுகவுடன் கூட்டணி அமைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அங்கிருந்து சாதகமாக எதுவும் பதில் வரவில்லை அதனால் திமுகவின் கவனத்தை ஈர்ப்பதற்காக அண்ணாமலையை விமர்சித்திருக்கிறார் என திமுக நிர்வாகிகள் சிலர் கூறியிருக்கின்றனர்.
தமிழக அரசியல் களம் தற்போது திமுக வா, பாஜக வா என நிலை மாறி வருகிறது. ஆளும் திமுகவின் பிரதான எதிரியான அண்ணாமலை தான் இருக்கிறார். அவரை விமர்சிப்பதும் வாயிலாக தங்களது இருப்பை காட்டிக்கொள்ள பிரேமலதா நினைக்கின்றார். மேலும் அண்ணாமலையை விமர்சித்தன் மூலம்தான் திமுக பக்கம் நெருங்க முடியும் என்பதால் அவர் இப்படிப் பேசி இருக்கலாம் என தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.