பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் தமிழ் ராக்கர்ஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் பிரேம்ஜி வல்லவன், சென்னை 600028, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரேம்ஜி பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
Start music 🕺🏻 https://t.co/mEX1ELQUMf
— PREMGI (@Premgiamaren) June 30, 2021
சமீபத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. இயக்குனர் பரணி ஜெயபால் இயக்கும் இந்த படத்திற்கு ‘தமிழ் ராக்கர்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மீனாச்சி தீக்ஷித் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார் . இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் படத்தின் டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வருகிற ஜூலை 2-ஆம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது .