தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரையண்ட் நகரில் இருக்கும் பூங்காவை சுத்தப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரையண்ட் நகரில் இருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற இரண்டு வருடங்களாகவே பயன்பாடின்றி இருந்து வருகின்றது. பூங்கா மூடப்பட்டிருப்பதால் முள் செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கின்றது.
மேலும் இதனால் சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருவதாக பொதுமக்கள் கூறினார். ஆகையால் பூங்காவை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி அப்பகுதி மக்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை வைத்தார்கள். இதன் விளைவாக மாநகராட்சி சார்பாக சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார்கள். இதையடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஆட்சியர் தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இதைத் தொடர்ந்து சுத்தப்படுத்தும் பணியில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஈடுபட்டார்கள்.