Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிறந்தது புரட்டாசி….! மீன் விலை வீழ்ச்சி…. “மீன் பிடிக்க செல்லாத மீனவர்கள்”….!!!!!!

புரட்டாசி மாதத்தால் மீன்கள் விலை வீழ்ச்சி அடையும் என்பதால் வேதாரண்யத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்து இருக்கும் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ள பள்ளம், கோடிய கரை உள்ளிட்ட மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் புரட்டாசி மாத விரதம் மேற்கொள்ளுவதால் அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள்.

இதனால் மீன் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் கூலிக்கு கூட மீன்கள் விற்பனையாகவில்லை. இதனால் மீனவர்கள் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றார்கள். ஆகையால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது. கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Categories

Tech |