சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்தடுத்து வரும் பேருந்து நிறுத்தங்களை அறிவிக்கும் திட்டமானது நேற்று தொடங்கப்பட்டது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்த திட்டம் விரைவில் தமிழகத்தில் அனைத்து பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளான இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதியிடம் நாளை உங்கள் பிறந்தநாள் என்பதால் அமைச்சராகும் அறிவிப்பு வெளியாகுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு, “CM தான் அதுகுறித்து முடிவு செய்வார்” என்று கூறினார்.