சென்னையில் பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாத காரணத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் ஜெய் கிருஷ்ணன் மற்றும் இந்துமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே கணவன் ஜெய் கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வந்துள்ளது.அதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.ஆனால் அவரின் மனைவி மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்துள்ளார்.
அதனால் மனம் உடைந்த ஜெய் கிருஷ்ணன் மனைவியை தொடர்பு கொண்டு ஏன் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என கேட்டுள்ளார். அதே சமயம் வீட்டிற்கு வரும்படியும் கூறியுள்ளார்.ஆனால் இந்துமதி இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் மன உளைச்சலில் இருந்த ஜெய் கிருஷ்ணா நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.