நடிகை சினேகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தி இருந்தார். இதையடுத்து இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்தார். சினேகா, பிரசன்னா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரசவத்திற்கு பின் சினேகா தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
https://www.instagram.com/p/CU6fb1dBH0t/
இந்நிலையில் இன்று சினேகா தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். தற்போது சினேகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.