இயக்குனர் சங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மகள் நடிகை அதிதி அசத்தலாக வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருகின்றார் சங்கர். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார். இந்த நிலையில் இயக்குனர் சங்கர் தனது 58 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இணையத்தில் வாழ்த்து கூறினார்கள். அந்த வகையில் சங்கரின் மகளும் நடிகையுமான அதிதி சங்கரும் அசத்தலாக வாழ்த்து கூறியுள்ளார்.
அதிதி தனது தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து கூறியுள்ளதாவது, சினிமாவை என் வாழ்வில் கொண்டு வந்த மாமனிதருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பான் இந்திய திரைப்படங்களின் முன்னோடி. உங்கள் கற்பனையை திரையில் உயிர்ப்பித்த விதம் மெய்சிலிர்க்க வைக்கின்றது. ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சங்கர் சார். ஆனால் எப்போதும் என் அப்பாவாக இருப்பதற்கு அதைவிட பெரிய நன்றி என குறிப்பிட்டு இருக்கின்றார்.
https://www.instagram.com/p/ChWn3UCOQej/?utm_source=ig_embed&ig_rid=c396de96-47d5-4a87-9e5a-a06ee35d66df