Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிறந்தநாள் கொண்டாடிய நண்பனுக்கு க்யூட்டாக வாழ்த்துக் கூறிய விக்கி”…. என்ன சொன்னார் தெரியுமா…???

பிறந்தநாள் கொண்டாடிய நெல்சனுக்கு இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் விக்னேஷ் சிவன். இவர் ஏழு வருடங்களாக நயன்தாராவை காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது நெருங்கிய நண்பர் நெல்சன் நேற்று பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விக்னேஷ் சிவன் வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் அதில் கூறியுள்ளதாவது, இந்த அழகான குறும்பு, ஜாலி பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜாலியோ ஜிம்கானா பாடலை போல் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையட்டும். உங்களுக்கு வெற்றியும் மகிழ்ச்சியும் மட்டுமே கிடைக்க வாழ்த்துக்கள். நீங்கள் மிகவும் திறமையானவர் மற்றும் உங்களை அசாதாரண திறமையால் எங்களை மகிழ் வித்துக்கொண்டே இருங்கள். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் நண்பா என கூறியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களைப் போன்ற நண்பர் கிடைக்க அவர் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என கூறுகின்றனர் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |