பிறந்தநாள் அன்று வைகை டேம்மில் குளித்து கொண்டிருந்த இளைஞன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை டுத்துள்ள வைகை அணை பகுதியில் மதன்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதன்குமாருடைய பிறந்தநாள் என்பதால் அவர் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து மதன்குமாரும் அவரது நண்பர்களும் இணைந்து வைகை அணையின் பின்புறம் உள்ள டேம்-இல் குளித்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மதன்குமார் திடீரென தண்ணீரில் முல்கியுள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக மதன்குமாரை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர் மயக்கமடைந்ததால் அவர்கள் மதன்குமாரை மீட்டு தேனி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மதன்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற வைகை அணை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிறந்தநாள் அன்று இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.