Categories
உலக செய்திகள்

“பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்”…. உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு….4 பேர் உயிரிழப்பு…!!!!!!!

மெக்சிகோவில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோவின் வடக்கு எல்லை நகரான cuidad Juarez பகுதியில் ஏராளமான உணவகங்களும், பொழுதுபோக்கு நகரங்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் நேற்று மாலை உணவருந்திக் கொண்டிருந்தனர். அங்கு பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டி இருந்தது. அப்போது கைத்துப்பாக்கிகளுடன்  உணவகத்திற்குள் நுழைந்த இரண்டு பேர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் காட்சியானது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உணவகத்தில் இருந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த இரண்டு பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சத்தம் கேட்டதும் சாப்பிட்டுக் கொண்டிருந்த பலர் தப்பி ஓடிவிட்டதால் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். இந்த நிலையில் இதுபற்றி தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களின் பணப் பைகளை திருடும் நோக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை மெக்சிகோ போலீஸ் தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |