நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை பா.ஜ.க.வினர் கடந்த மாதம் 17 ஆம் தேதி மிகவும் விமர்சையாக கொண்டாடினார்கள். அவ்விழாவில் கொரோனா தடுப்பூசியை 2.5 கோடி பேருக்கு 24 மணி நேரத்தில் செலுத்தி சாதனை புரிந்தனர். பா.ஜ.க.வினர் அனைவரும் அச்சாதனை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அவர்கள் இந்தியா முழுவதும் கோவின் தளத்தில் கடந்த 10 நாட்களாக செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து பட்டியல் மற்றும் புள்ளி விவரங்கள் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டார். அந்த டுவிட்டர் பதிவில் அவர், “மக்களை ஏமாற்றுவதற்காகவே பிரதமர் மோடியின் பிறந்த நாளன்று அதிக அளவில் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.
ஆனால் மற்ற நாட்களில் அவ்வாறு செலுத்தப்படவில்லை” என்று பதிவிட்டிருந்தார். மேலும் ட்விட்டர் பக்கத்தில் ‘வேக்ஸினேஷன்’ என்கிற ஹேஷ்டேக்கில் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்த நிலையில், அதில் ராகுல் காந்தியும் ‘பிறந்தநாள் நிறைவடைந்தது’ என்ற கேப்ஷன் உடன் நேற்றும், இன்றும் தடுப்பு மருந்து வினியோகம் குறித்த தனது கருத்தை பகிர்ந்திருந்தார்.
Event ख़त्म! #Vaccination pic.twitter.com/S1SAdjGUA2
— Rahul Gandhi (@RahulGandhi) September 19, 2021